Showing posts with label கொத்தனார். Show all posts
Showing posts with label கொத்தனார். Show all posts

Thursday, September 23, 2010

கல்!

கூழாங்கல்லில் விளையாடி,
கருங்கல்லால் அடித்தளம் கட்டி,
செங்கல்லால் சுவர் எழுப்பி,
பளிங்கு கல்லால் தரை எழுப்பி,
பாறாங்கல்லால் படி அமைக்கும்
என் கொத்தனார் கணவனே...

வைரக்கல் கேட்டதற்கு
கல்லாய்ப் போனதுன் மனம் ஏனோ...
கல்லானாலும் நீயென்
கணவன் தானோ...