Showing posts with label வானவில். Show all posts
Showing posts with label வானவில். Show all posts

Wednesday, September 8, 2010

காளான்!

மேகங்களாய் தொலை தூர
உறவினர்கள் வந்து சேர,
இடியென கெட்டி மேளம் கொட்ட,
மின்னலெனும் பெண்ணுக்கும்,
மழையாகிய உனக்கும்,

ஆலங்கட்டியாய் அட்சதை தூவ,
நடந்த திருமணத்திற்கு,
வானவில் நடத்திய வரவேற்பில்
நட்சத்திரங்கள் வருகை தந்து,

சிறப்பித்த உன் திருமண
சாட்சியாக, மறுநாள்
காலையில் என் குழந்தையின்
கையில் உன் குழந்தை
காளான் வடிவில்.

Thursday, July 29, 2010

பிரிவு!

என் வீட்டு முற்றத்தில்
தகிக்கும் வெயிலில்
மனம் குளிர தென்றலானாய்...

அந்திப் பொழுதில் மழைச்
சாரலில் வானவில்லைக்
காண்கையில் வாடைக் காற்றானாய்...

மழை நின்ற போது
மணம் பரப்பி பூங்காற்றானாய்...

உனை நேசித்து
சுவாசித்த பொழுதுகள்
எத்தனை எத்தனை...

ஏனோ முன் இரவில் வீசிய
சூறாவளியால்
வேரற்று சாய்ந்து
அசைவற்று விட்டாயே...மரமே...