Tuesday, September 7, 2010

ஏக்கம்!

எம்மதமும் சம்மதம்,
யாதும் ஊரே யாவரும் கேளிர்,
அன்பே தெய்வம்... என்றாகிப் போனது
என் இயல்பு வாழ்க்கை...

பெரியோர் சொற்படி
உணர்ந்து நடக்கின்றேன்,
உணர்ந்து தான் நடக்கின்றேன் வாழ்வின்
ஒவ்வொரு அடியும்....உணர்வே
வாழ்வின் ஆதாரமாய்...

அதிசயமாய் வாழ்ந்தாலும்
அதிசயத்தைக் கண்டதில்லை...

அகத்தின் அழகு முகத்தில்
தெரிய வில்லை...எனவே
கண்டதும் காதல் வரவில்லை
எதிலும் எனக்கு...

அறு சுவை அறியும் என்னால்,
குறைந்தது ஒன்று...
ஆறறிவிலும், ஐம்புலன்களிலும்...

வெண்ணிற தாளில்,
நீல நிற மையில்,
பசும்புல் தரையில்,
கறு நிற கண்ணாடியுடன் நான்,
ண்ம் என்னவென்று
எண்ணியவண்ணம்...

கண்காட்சி, கண்கொள்ளா காட்சி என்னவென்றும்,
அழகு, பேரழகு என்னவென்றும்,
கண்களால்
அறிய ஏக்கமாய்....

No comments:

Post a Comment