Wednesday, July 21, 2010

யாதுமாகி!

கருவில் சுமந்து ஈன்று...
பாலூட்டி சீராட்டி வளர்த்ததால்..
தாய் ஆனேன்...
அறிவூட்டி வளர்த்ததால்
தந்தை ஆனேன்...
உன்னைக் கொஞ்சி மகிழ்ந்தபோது
குழந்தை ஆனேன்...

பள்ளிப் பருவத்தில்...உனக்கு
ஆசான் ஆனேன்...
நோயுற்றபோது
மருத்துவர் ஆனேன்...
உன் எதிர் காலத்தை திட்டமிட
பொறியாளர் ஆனேன்...

உன் தேவையை மன்றாட உன் தந்தையிடம்
வழக்கறிஞர் ஆனேன்...
உன் சந்தோச தருணத்தில்
ஆத்திகன் ஆனேன்...
துக்கம் நேர்ந்தபோது
நாத்திகன் ஆனேன்...

உன் எழிலில் மயங்கிய
கவிஞன் ஆனேன்...உன்
குறும்பை ரசித்த
ரசிகை ஆனேன்...
சேவை செய்வதில்
பணியாள் ஆனேன்...

இவை யாவும் உன்னிடம் கற்ற
மாணவன் ஆனேன்...
இதில் பதித்தவை சில...
மனதில் பதிந்தவை பல...

இதை தோளில் தொங்கிய என்
பிள்ளைக்கு அர்ப்பணிப்பதா?...
தோளில் சுமந்த உனக்கு அர்ப்பணிப்பதா?...
அர்ப்பணித்தேன்...

எனக்காக உன்னை...என்
குழந்தைக்கு என்னை அர்ப்பணித்த
அன்னை உனக்கு...

2 comments:

  1. //உன் சந்தோச தருணத்தில்
    ஆத்திகன் ஆனேன்...
    துக்கம் நேர்ந்தபோது
    நாத்திகன் ஆனேன்...//

    இதுகாறும் எங்கும் கண்டிரா அடிகள். குழந்தை மகிழ்வாய் இருக்கும்போது கடவுளைப் போற்றியும், குழந்தைக்கு ஏதேனும் சிக்கல் எனும்போது கடவுளைத் தூற்றியும் இருப்பது ஒரு தாயின் இயல்புதான். அதனை இவ்வடிகள் அழகாய் உரைக்கின்றன! வளரும் கவிஞருக்கு சிறுவனின் வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. உன்களுடைய கவிதை என்க்கு மிகவும் பிடித்திருக்கு. என் தாயின் நினைவுகள் மறவா நினைவுகளாக என் கண் முன் நிழல் படம் போல் காட்சி அளித்த உங்கள் கவிதைக்கு நன்றி.

    ReplyDelete