Thursday, July 29, 2010

பிரிவு!

என் வீட்டு முற்றத்தில்
தகிக்கும் வெயிலில்
மனம் குளிர தென்றலானாய்...

அந்திப் பொழுதில் மழைச்
சாரலில் வானவில்லைக்
காண்கையில் வாடைக் காற்றானாய்...

மழை நின்ற போது
மணம் பரப்பி பூங்காற்றானாய்...

உனை நேசித்து
சுவாசித்த பொழுதுகள்
எத்தனை எத்தனை...

ஏனோ முன் இரவில் வீசிய
சூறாவளியால்
வேரற்று சாய்ந்து
அசைவற்று விட்டாயே...மரமே...

Saturday, July 24, 2010

சாயல்!

உனைக் கெஞ்சி கொஞ்ச
அஞ்சினாய்... அச்சம்...

உனை வர்ணித்த கவியில்
பொய்யும் உண்டென
அறியாய்... மடம்...

கண் பார்த்தாய்...
கன்னம் சிவந்தாய்...
முகம் மறைத்தாய்... நாணம்...

என் அன்பில் விழுந்த நீ...
வேறொரு ஆண்...
நெருங்கா நெருப்பானாய்... பயிர்ப்பு

முன் நாளில் சொன்ன சாயல்
இன்னாளிலும் கண்டேனே
பெண்ணே உன்னிடம்...

என்னவளே,
தொடரட்டுமா, தொடவா...?
உன் நிழலை...

Thursday, July 22, 2010

தானம்!

கையில் உள்ள குடை
காக்கும்... வெயிலிலும், மழையிலும்
நம்மை...

கையால் கொடுத்த கொடை
காக்கும்.. சமயத்தில்...
நம்மையும் நம் குலத்தையும்...

மனமிருப்பின்.,
வெயில், மழை பாராது,
குடை கொண்டும் கொடை செய்வோம்...

Wednesday, July 21, 2010

யாதுமாகி!

கருவில் சுமந்து ஈன்று...
பாலூட்டி சீராட்டி வளர்த்ததால்..
தாய் ஆனேன்...
அறிவூட்டி வளர்த்ததால்
தந்தை ஆனேன்...
உன்னைக் கொஞ்சி மகிழ்ந்தபோது
குழந்தை ஆனேன்...

பள்ளிப் பருவத்தில்...உனக்கு
ஆசான் ஆனேன்...
நோயுற்றபோது
மருத்துவர் ஆனேன்...
உன் எதிர் காலத்தை திட்டமிட
பொறியாளர் ஆனேன்...

உன் தேவையை மன்றாட உன் தந்தையிடம்
வழக்கறிஞர் ஆனேன்...
உன் சந்தோச தருணத்தில்
ஆத்திகன் ஆனேன்...
துக்கம் நேர்ந்தபோது
நாத்திகன் ஆனேன்...

உன் எழிலில் மயங்கிய
கவிஞன் ஆனேன்...உன்
குறும்பை ரசித்த
ரசிகை ஆனேன்...
சேவை செய்வதில்
பணியாள் ஆனேன்...

இவை யாவும் உன்னிடம் கற்ற
மாணவன் ஆனேன்...
இதில் பதித்தவை சில...
மனதில் பதிந்தவை பல...

இதை தோளில் தொங்கிய என்
பிள்ளைக்கு அர்ப்பணிப்பதா?...
தோளில் சுமந்த உனக்கு அர்ப்பணிப்பதா?...
அர்ப்பணித்தேன்...

எனக்காக உன்னை...என்
குழந்தைக்கு என்னை அர்ப்பணித்த
அன்னை உனக்கு...

Tuesday, July 20, 2010

நீர்!

குளியலறையில் வெந்நீரானாய்...
குடிக்கும்போது தண்ணீரானாய்...
வரவேற்பில் பன்னீரானாய்...
துக்கத்தில் கண்ணீரானாய்...
உற்சாகத்தில் தேநீரானாய்...

யார் நீர் என்றேன்...
யாம் நீர் என்றாய்...
பூர்வீகம் என்னவென்றேன்...

மழை என்றாய்...
மலைத்து நின்றேன்...
குளம் என்றாய்...புரியாமல்
குளம்பி நின்றேன்...
கிணறு என்றாய்...ஒரு நொடி
திணறி நின்றேன்...
ஆறு என்றாய்...விளங்காமல் இளைப்
பாறி நின்றேன்...
ஏரி என்றாய்... மர
மேறி எட்டி பார்த்தேன்... காணவில்லை...
கடல் என்றாய்...கண்டேன்... கண்டு
உடல் சிலிர்த்து நின்றேன்...
நீர் நீரென்று...

Monday, July 19, 2010

காமராஜர்!

ஒவ்வொருவர் உள்ளத்திலும் உள்ள ஒருவன் நீ...
ஊர் தோறும் உன்னால் உருவாகின பள்ளிக்கூடங்கள் பத்து ...
நீ மக்களுக்கு ஆற்றிய சேவைகள் பல நூறு...
ஆயிரத்தில் ஒரு அரசியல்வாதி...
உன் இறுதிநாள் வரை உன்னிடம் இல்லை ரூபாய் லட்சம்...
உன்னால் கல்விக் கண் பெற்றோர் கோடியில் இன்று...
கணிதம் வென்ற படிக்காத மேதை நீ...

Wednesday, July 14, 2010

கிளி!

பள்ளி செல்லவில்லை....சயனம்
பல்லி சொல்லவில்லை...உன்போல்
பழம் தின்னவில்லை....

உன்னாலே... நான்...
உணவு உண்ணாமலே...உன்
விந்தையாலே...

உன் வாக்கு....
பலிப்பதால்... உன்னைக் கண்டு
களிப்பதால்... என் பொழுதைக்
கழிப்பதால்....

நாளும் உன்னைக் கவனித்தாலும் எனக்கு...
அலுக்கவில்லை... கவனம் வேறில்...
இழுக்கவில்லை...

உன் அலகால்....
அழகாய்....
அளவாய்...
உண்பதைக் கண்டு...

Tuesday, July 13, 2010

நிலா!

மழலைகளை உன் பொலிவால் உன்பால் இழுத்தாய்....
கட்டிளம் காளைகளை இரும்பாய்க் கட்டி இழுத்தாய்....
காலத்தை வென்ற கவிஞனை காந்தமாய் ஈர்த்தாய்...
விண் அளந்த விஞ்ஞானியை விடியும் முன்னே வீழ்த்தினா
ய்...எனவே.....
காண
வருகிறேன்...
நேரில் காண வருகிறேன்...

நீ தங்கமாய் ஜொலித்த நாளை பௌர்ணமி என்றனர்....
நிலக்கரியாய் ஒளிந்த நாளை அமாவாசை என்றனர்...
இருக்கிறதா உம்மிடம் இத்தனை கனிமங்கள் ...காண வருகிறேன்...
உன்னில் காண வருகிறேன்...

அந்நியனாய்இருந்தும் என்னவர்களை ஈர்த்தாயே...இருப்பினும்
ஈர்ப்பு சக்தி குறைவாமே உன்னில்... அதனால்
...
காண வருகிறேன்...
நேரில் காண வருகிறேன்...

நீ பூமியைச் சுற்ற, பூமி உன்னைச் சுற்ற, எனக்கு
தலை சுற்ற..... உன்னை காண வருகிறேன்...
நேரில் காண வருகிறேன்...
உன்னை நேர் காண வருகிறேன்....

காத்திருப்பாய் கண் விழித்து...
பெறுவேன் உன் விடையை....
உன்னிடம் விடையை....


Thursday, July 8, 2010

நன்றி!

நன்று சொன்னதற்கு நன்றி சொல்லி
கொன்று விடவில்லை உன் உணர்வை. மாறாக
நின்று ஏற்கிறேன் உன் பண்பை. இளங்
கன்று நான் கவி புனைவதில். இருப்பினும்
வென்று தருவேன் பல கவிகளை
இன்று முதலாய். நீ
மென்று
தின்று சொல்வாய் என் கவி எச்சுவை
என்று....

Wednesday, July 7, 2010

பழமையில் புதுமை!

கனி நீ என்றது கணினி
தேன் நீ என்றது தேனீ
பழம் நீ என்றது பழனி
கற்கண்டாய் இனிக்குதே இந்த கலவை
இதுதான் பஞ்சாமிர்தத்தின் பழமை....







Tuesday, July 6, 2010

காதல்

இறந்த காதல்களில் தான் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது காதல்...

வறுமை!

எதிர் வீட்டு ஜன்னலில் எத்தனை சட்டைகள்....என் வீட்டு சட்டையில் எத்தனை ஜன்னல்கள்...