மழலைகளை உன் பொலிவால் உன்பால் இழுத்தாய்....
கட்டிளம் காளைகளை இரும்பாய்க் கட்டி இழுத்தாய்....
காலத்தை வென்ற கவிஞனை காந்தமாய் ஈர்த்தாய்...
விண் அளந்த விஞ்ஞானியை விடியும் முன்னே வீழ்த்தினாய்...எனவே.....
காண வருகிறேன்...
நேரில் காண வருகிறேன்...
நீ தங்கமாய் ஜொலித்த நாளை பௌர்ணமி என்றனர்....
நிலக்கரியாய் ஒளிந்த நாளை அமாவாசை என்றனர்...
இருக்கிறதா உம்மிடம் இத்தனை கனிமங்கள் ...காண வருகிறேன்...
உன்னில் காண வருகிறேன்...
அந்நியனாய்இருந்தும் என்னவர்களை ஈர்த்தாயே...இருப்பினும்
ஈர்ப்பு சக்தி குறைவாமே உன்னில்... அதனால்...
காண வருகிறேன்...
நேரில் காண வருகிறேன்...
நீ பூமியைச் சுற்ற, பூமி உன்னைச் சுற்ற, எனக்கு
தலை சுற்ற..... உன்னை காண வருகிறேன்...
நேரில் காண வருகிறேன்...
உன்னை நேர் காண வருகிறேன்....
காத்திருப்பாய் கண் விழித்து...
பெறுவேன் உன் விடையை....
உன்னிடம் விடையை....
No comments:
Post a Comment