Tuesday, July 20, 2010

நீர்!

குளியலறையில் வெந்நீரானாய்...
குடிக்கும்போது தண்ணீரானாய்...
வரவேற்பில் பன்னீரானாய்...
துக்கத்தில் கண்ணீரானாய்...
உற்சாகத்தில் தேநீரானாய்...

யார் நீர் என்றேன்...
யாம் நீர் என்றாய்...
பூர்வீகம் என்னவென்றேன்...

மழை என்றாய்...
மலைத்து நின்றேன்...
குளம் என்றாய்...புரியாமல்
குளம்பி நின்றேன்...
கிணறு என்றாய்...ஒரு நொடி
திணறி நின்றேன்...
ஆறு என்றாய்...விளங்காமல் இளைப்
பாறி நின்றேன்...
ஏரி என்றாய்... மர
மேறி எட்டி பார்த்தேன்... காணவில்லை...
கடல் என்றாய்...கண்டேன்... கண்டு
உடல் சிலிர்த்து நின்றேன்...
நீர் நீரென்று...

1 comment:

  1. "யார் நீர் என்றேன்...
    யாம் நீர் என்றாய்..." - இந்த அடி நன்றாக உள்ளது! வளர்ந்து வரும் கவிஞருக்கு சிறுவனின் வாழ்த்துகள்!

    ReplyDelete